இரண்டாவது தடுப்பூசிக்கு 5 ஆயிரம் ரூபாய் அறவிடப்படுகிறதா? புதிய சர்ச்சை!!!!
அஸ்ராசேனோகா இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்காக 5 ஆயிரம் ரூபாய் அறவிடப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கட்டணம் அறவிடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அதனை உறுதிப்படுத்த போதுமான சாட்சியங்கள் தமது சங்கத்திடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அஸ்ராசேனேகா இரண்டாவது தடுப்பூசி குறிப்பிட்டளவு தொகை மாத்திரம் தற்போது கையிருப்பில் உள்ளது. 50 ஆயிரத்திற்கும் குறைவான தடுப்பூசி மருந்துகளே உள்ளன.
இந்த நிலையில், இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், அதனை பணத்திற்கு விற்பனை செய்யும் வர்த்தகம் முன்னெடுக்கப்படுகிறது.
இது குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நவீன் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.