உடன் அமுலுக்கு வரும் வகையில் மற்றுமொரு பகுதி ‘லொக்டவுண்’

[sg_popup id=”3786″ event=”inherit”][/sg_popup]கண்டி மாவட்டத்திலுள்ள மற்றுமொரு பகுதியை முடக்குவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, கண்டி – பூஜாபிட்டி – கொஸ்கொட்டே பகுதியே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் 31 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி நகரின் பூரணாவத்தை மேற்கு பகுதி ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *