பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *