ஒரே நாளில் நிகழ்ந்த மூன்று அதிசயம்… பிரகாசமாய் தோன்றிய ரத்த நிற முழு சந்திரகிரகணம்!!
சூரியன் மற்றும் சந்திர ஒரே நேர் கோட்டில் சூரியனின் முழு ஒளியைப் பெறக்கூடிய நாளில் சூரியன் – சந்திரனுக்கு இடையே பூமி அதே நேர்கோட்டில் வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வு தான் நாம் சந்திர கிரகணமாக காண்கிறோம்.
கிரகண நேரத்தில் பெரிய நிலா அதாவது, ‘சூப்பர் மூன் மற்றும் பிளட் மூன்’ எனப்படும், ரத்த நிலா தோன்றும் வானியல் நிகழ்வும் நடக்கிறது. மேலும், இன்று மதியம், 3:15 முதல் மாலை, 6:23 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற்றது.
மாலை, 4:39 முதல், 4:58 மணி வரை முழு சந்திர கிரகணம் காணப்பட்ட்து. இந்தியாவில், மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் ஒடிசா, அந்தமான் நிக்கோபர் தீவின் கடலோர பகுதிகளில், பாதி சந்திர கிரகணத்தை பார்க்க முடிந்தது.
இந்தியாவின் மற்ற பகுதிகளில் கிரகணம், பெரிய நிலா, ரத்த நிலா மூன்றையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும், இன்று ஏற்படும் சந்திர கிரகணத்துக்குப் பின் இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை இந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி காணலாம். நடப்பாண்டில் முதல் முழு சந்திர கிரகணம், பிளட் மூன் (Blood moon) மற்றும் சூப்பர் மூன் ஆகிய 3 வானியல் அதிசயங்கள் ஒரே நாளில் நிகழவுள்ளன .
Luna ❤️
LOOK: The supermoon as seen from Makati City moments before the totality of lunar eclipse at around 6:30 PM on Wednesday. Photos were enhanced using Lightroom. (Photos courtesy of Ginno Gatchalian Balmonte) pic.twitter.com/zwVQ6m8jHD
— The Philippine Star (@PhilippineStar) May 26, 2021