புயல் வேகத்தில் Single shot இல் கோல் அடித்த மெஸ்ஸி…… வாயடைத்து போனது ஒட்டுமொத்த மைதானமும்(காணொளி)!!
பார்க் டெஸ் பிரின்சஸ்(Parc des Princes) மைதானத்தில் நடந்த லீக் 1 போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன்(Saint Germain) மற்றும் டௌலூஸ்(Toulouse) அணிகள் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன்(Saint Germain) அணி 2 -1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் டௌலூஸ்(Toulouse) அணி வீரர் பிரான்க்கோ கோல் அடித்து மிரட்டினார்.
அதனைத் தொடர்ந்து PSG அணியின் நட்சத்திர வீரர் ஹாகிமி கோல் அடிக்க முதல் பாதி 1-1 என சமனில் இருந்தது.
இரண்டாம் பாதியில் துரத்தலில் ஈடுபட்ட மெஸ்சி(Messi),
58வது நிமிடத்தில் கோல் அசத்தலாக கோல் அடித்தார்.
தங்களிடம் வந்த பந்தை எப்படி கடத்திச் சென்று கோல் அடிப்பது என சக அணி வீரர்கள் யோசிப்பதற்குள்,
மெஸ்சி திடீரென புயல்வேகத்தில் பந்தை வலையை நோக்கி உதைத்தார்.
இதனை சற்றும் எதிர்ப்பாராத PSG வீரர்களே மிரண்டு போயினர்.
அதுவே அந்த அணியின் வெற்றிக்கான கோல் ஆக மாறியது.
PSG அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/tr/register?ref=V3MG69RO