தென்னிலங்கையில் வெடித்த கலவரம்….. 7 பேர் உயிரிழப்பு – வெளிவரும் பகீர் தகவல்கள்!!

நேற்று திங்கட்கிழமை ஏழு பேர் இறந்துள்ளனர் மற்றும் 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

பிரதேச சபைத் தலைவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்று இரவு அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததில் பொலிஸ் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

 

24 வயதான காவல்துறை உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் மாரடைப்பு காரணமாக மற்றுமொரு மூத்த பிரஜையும் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ்வாறு ஆங்காகே நடந்த கலவரங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *