பேருந்தின் மிதி பலகையிலிருந்து வீழ்ந்த பெண்….. பதுளை – கொழும்பு பிரதான வீதியில் சம்பவம்!!

பேருந்து மிதி பலகையிலிருந்து பெண் ஒருவர் வீழ்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்டாரவெலயில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் மிதி பலகையில் இருந்தே அந்தப் பெண் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் அப்பகுதியிலிருந்த சி.சி.ரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பண்டாரவெல, ஹல்பே பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்தில் இருந்து தனது மகளை இறக்கி விட்டு குறித்த பெண் இறங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்து நகர்ந்துள்ளது.

இதன்போதே அப்பெண் மிதி பலகையில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்களால் பெண்ணை காப்பாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன் அங்கு நின்றவர்கள் பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *