மூச்சு பயிற்சி மற்றும் மாதவிடாய் சுழற்சியை அளவிடும் அம்சங்களுடன் அறிமுகமாகும் ரெட்மி நிறுவனத்தின் புதிய Smart watch!!

ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் 2 லைட்டிற்கு 10 நாட்கள் பேட்டரி லைஃப் தரப்பட்டுள்ளது.

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி வாட்ச் 2 லைட் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வாட்ச் 1.55 இன்ச்  TFT டிஸ்பிளே, 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 வாட்ச் ஃபேசஸ், 100 ஒர்க்கவுட் மோட்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
HIIT, யோகா உள்ளிட்ட 17 ப்ரொபஷனல் மோட்ஸும் இதில் இடம்பெற்றுள்ளது.
மேலும்,
இந்த வாட்ச் 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டென்ஸ் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் 50 மீட்டர் வரை நீரில் மூழ்கினாலும் வாட்ச் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த வாட்சில் ஜிபிஎஸ் டிராக்கிங் இடம்பெற்றுள்ளது.
மேலும்,
இதில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் சேட்சுரேஷன் அளவை கன்ட்ரோல் செய்யும் ஸ்கேனர், 24 மணி நேரம் இதய துடிப்பை ஆராயும் மானிட்டரிங், தூக்கம் மற்றும் ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி,

மூச்சு பயிற்சி மற்றும் மாதவிடாய் சுழற்சியை அளவிடும் அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த வாட்சிற்கு 10 நாட்கள் பேட்டரி லைஃப் தரப்பட்டுள்ளது.
மேலும் இதில் 262mAh பேட்டரி, மேக்னடிக் சார்ஜிங் போர்ட் ஆகியவையும் இதில் தரப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட் வாட்சின் விலை ரூ.4,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *