இன்றைய தினம் முதல் அதிகரிக்கப்பட்ட்து சீமெந்து, கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலை – இலங்கை மக்களுக்கு விழுந்த பேரிடி!!

சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றுக்கான புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இதற்கமைய கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை இன்று (11) அதிகாலை முதல் 10 ரூபாவால் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர்.

எனினும், 100 ரூபாயினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்திருந்தார்.

இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நள்ளிரவு முதல் 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபா 1,257 ஆல் அதிகரிக்க லிட்ரோ காஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி,

புதிய விலை ரூ .2,750 ஆக இருக்கும். 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ .503 ஆல் அதிகரித்து ரூ .1,101 ஆக உயர்ந்துள்ளது.

2.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 231 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, புதிய விலை 520 ரூபாய் என்று லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 984 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிய விலை 2,840 ரூபாவாகும். 5 கிலோ எரிவாயுவின் விலை 393 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,136 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *