கைக்கடிகாரம் ஒன்றின் மிகக்குறைந்த ஆரம்ப விலையே 3.3 இலட்ச்சம்!!
Girard-Perregaux நிறுவனத்தின் புதிய கடிகாரங்கள் பல்வேறு சிறப்பம்சங்களை கொள்ளதால் அவை பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1791 ஆம் ஆண்டு உருவான இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களுக்காக ஆடம்பர கை கடிகாரங்களை தயாரிக்க தொடங்கியது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த நிறுவனம் தயாரிக்கும் கைக்கடிகாரங்கள் பெரும்பாலும் கைகளால்தான் தயாரிக்கப்படுகிறது.
அதனால்,
இதன் ஒவ்வொரு பாகங்களும் உன்னிப்பாக பார்த்து பார்த்து வடிவமைக்கப்படுகிறது.
இப்பணியில் உலகின் தலை சிறந்த கைவினை கலைஞர்கள், பொறியாளர்களை Girard-Perregaux நிறுவனம் பயன்படுத்துகிறது.
அதனால்,
தான் இந்த கைக்கடிகாரங்களின் விலையும் அதிகமாக இருக்கிறது.
இவ்வாறு தயாரிக்கப்படும் கடிகாரங்களின் ஆரம்ப விலை 3.3 லட்சமாகும்.
அந்த வகையில்,
தற்போது ‘Cosmos‘ வரிசையில் மேலும் சில கடிகாரங்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
இந்த Cosmos வகை கடிகாரங்கள் முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கைக்கடிகாரங்கள் பூமியிலிருந்து கிடைக்கும் பல்வேறு ரத்தின கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது,
முதலாவது அவென்டுரைன் (Fiest Aventurine).
இந்த வகை ரத்தின கற்கள் பச்சை நிறத்தில் இருக்கும்.
பூமியில் கிடைக்கும் விலையுயர்ந்த கற்களில் இதுவும் ஒன்று.
இந்த கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள மற்றொரு கல் ஓனிக்ஸ்(Onyx).
இதுவும் ஒருவகை விலையுயர்ந்த ரத்தின கல்தான்.
அதேபோல,
அப்சிடியன்(Obsidian) எனப்படும் மற்றொரு ரத்தினத்தை பயன்படுத்தி இந்த கைக்கடிகாரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று ரத்தின கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதால் மற்ற கைக்கடிகாரங்களிலிருந்து இது தனித்துவமாக தெரிகிறது.
இந்த கடிகாரங்களில் இரண்டு வட்டங்கள் இருக்கும்.
இதில் ஒன்றில் நட்சத்திரங்கள் இருக்கும்.
மற்றொன்றில் உலக வரைபடம் இருக்கும்.
பகல் இரவை பொறுத்து இது மாறிக்கொண்டே இருக்கும்.
மேலும்,
இவற்றில் தங்கமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இதனால்,
தான் இந்தக் கைகடிகாரம் மிகவும் விலையுயர்ந்ததாக பேசப்படுகிறது.
Your article helped me a lot, is there any more related content? Thanks!