2500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சொக்கெட் உருவாக்கி உலகசாதனை!!

2500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சொக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ரஸ்ஸல் ஸ்டோவர் என்கிற பிரமாண்ட நிறுவனம்(Russell Stover) ஒன்று இதை தயாரித்துள்ளது.

இந்த சொக்லெட்டை உருவாக்க ரஸ்ஸல் ஸ்டோவர் நிறுவனம்(Russell Stover chocolate company) மொத்தம் 205 இராட்சத சொக்லேட் துண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது.

சொக்லேட் பெட்டிக்குள் கேரமல், தேங்காய் கொத்து, பழம் மற்றும் நட்ஸ் கேரமல் என 9 வகை சொக்லெட்டுகள் உள்ளது.

கின்னஸ் உலக சாதனைப்படி,

2547.50 கிலோ எடையுள்ள பிரமாண்டமான சொக்லேட் நிரப்பப்பட்ட பெட்டியுடன், ரஸ்ஸல் ஸ்டோவர் (Russell Stover) என்ற நிறுவனம் சாதனையை முறியடித்தது.

கடந்த ஏப்ரல் 17ம் திகதி அமெரிக்காவின் மிசோரி(Missouri) ,

கன்சாஸ்(Kansas) நகரில் இது காட்சிப்படுத்தப்பட்டதாகவும்

உலக சாதனை பராமரிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சாதனையை முறியடிக்கத் தேவையான குறைந்தபட்ச எடையை அடைய

ரஸ்ஸல் ஸ்டோவர்(Russell Stover) மொத்தம் 205 இராட்சத சொக்லேட் துண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது.

அவை ரஸ்ஸல் ஸ்டோவர் தொழிற்சாலைகளில்(Russell stuver chocolate factory) வடிவமைக்கப்பட்டன.

மேலும்,

இந்த முயற்சியின் போது ஒவ்வொரு சொக்லேட் துண்டும் எடைபோடப்பட்டது.

சிறிய துண்டுகள் சுமார் 4.53 கிலோ எடை கொண்டதுடன் சில பெரிய சொக்லேட்டுகள் 16 கிலோவும் இருந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *