விண்வெளி வீராங்கனையாகவுள்ள Miss England அழகி “Jessica Gagen”!!

Miss England(மிஸ் இங்கிலாந்து) பட்டம் வென்ற இளம்பெண் ஒருவர் விண்வெளிக்கு செல்வதே தனது லட்சிய திட்டம் எனத் தெரிவித்துள்ளார்.

விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் பயின்று வரும் ஜெசிகா (Jessica Gagen) என்ற வளர்ந்து வரும் ரொக்கெட் விஞ்ஞானியான இவர் அண்மையில் Miss England பட்டம் வென்றிருந்தார்.

இந்த நிலையில்,

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்வெளி வீராங்கனையாக விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் Miss England பட்டத்தை 27 வயதான ஜெசிகா ககேன்(Jesika Gahen) வென்றார்.

அடுத்த ஆண்டு அவர் உலக அழகிப்போட்டியில் போட்டியிட முயற்சித்து வருகிறார்.

இதன்மூலம்,

விண்வெளிக்கு செல்லும் முதல் பிரித்தானிய அழகி என்ற சாதனையை அவர் படைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெசிகா(Jessica Gagen) கருத்துத் தெரிவிக்கையில்,

“எனது பொறியியல் பட்டம் எனக்கு பல கதவுகளைத் திறக்கிறது.

ஒரு நாள் எனது கனவைப் பின்பற்ற ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளளேன்.

ஒரு நாள் நான் விண்வெளிக்கு செல்ல விரும்புகிறேன்.

நான் சரியான பாதையில் இருக்கிறேன்.

எனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, நான் இந்த துறையில் மூன்று ஆண்டுகள் முடிக்க வேண்டும்.

பின்னர் நான் விண்வெளி வீரர் ஆக விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

தனது தந்தை தொழில்துறையில் பணிபுரிவதைப் பார்த்து,

சிறு வயதில் இருந்தே பொறியாளராக வேண்டும் என்று விரும்பியதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *