இந்தியாவின் கடன் வசதியின் கீழ் இறுதி எரிபொருள் கப்பல் கொழும்பை வந்தடைந்தது!!
இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடன் வசதியின் கீழ் கிடைக்கும் 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய இறுதி கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது.
எவ்வாறாயினும்,
குறித்த கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை எரிபொருள் நிறுவனங்களுக்கு 735 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தவேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்,
இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு,
மீண்டும் நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் திகதி தொடர்பில் தற்போது சரியாக குறிப்பிட முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ந்தும் மக்கள் அதிகாலை முதல் வரிசைகளில் காத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.