எரிபொருள் பிரச்சினைக்காக ஜனாதிபதி  கோட்டாபய உரிய அதிகாரிகளுக்கு விடுத்துள்ள விசேட பணிப்புரை!!

கையிருப்பில் உள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்குமாறு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

அத்துடன்,

நிதியமைச்சு, மத்திய வங்கியுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புடன்,

போதியளவு எரிபொருளை கோருவதற்கு வசதியளித்து நாணயக் கடிதங்களை திறக்க திட்டம் வகுக்க வேண்டுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்

கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் எரிபொருளை கொள்வனவு செய்வற்காக என்றும் இல்லாத அளவுக்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Motorbikes and three-wheeler vehicles queue to fill their tanks up at a Ceylon Petroleum Corporation fuel station in Colombo on April 12, 2022. – Crisis-stricken Sri Lanka defaulted on its $51 billion external debt on April 12 after running out of dollars to import desperately needed goods and sparking widespread protests demanding the president’s resignation. (Photo by Ishara S. KODIKARA / AFP)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *