எரிபோபிருள் நிரப்பி விட்டு கட்டுப்படடை இழந்து – நிரப்பிக்கொண்டிருந்த இன்னொரு வண்டியுடன் மோதி….. எரிபொருள் பம்பிகளையும் சேதப்படுத்திய அதி சொகுசு வாகனம்!!

கொழும்புமடிவேல கோட்டை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதி சொகுசு வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியது.

இச்சம்பவம் இன்று (01/09/2022) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்த அதி சொகுசு வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து

அங்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியுயுடன் மோதியதுடன் எரிபொருள் நிரப்பும் பம்பிகளையும் சேதப்படுத்தியுள்ளது.

இதன்போது,

எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் அதிசொகுசு வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன்

அங்கிருந்த உந்துருளி, முச்சக்கரவண்டி மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பம்பிகள் என்பன சேதமடைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *