மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் மீட்பு
காலி அக்மீமன பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் வீட்டில் இருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலத்தில் உடலிலும், கழுத்திலும்
வெட்டுக் காயங்களும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (25/04/2023) காலை தேயிலை தோட்டத்திற்கு தேயிலை பறிப்பதற்காக சென்ற போது இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையில்,

மேலும்,
சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.