நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது….. “பால் வாக்கர்” மகளின் திருமணத்தை தந்தை இடத்தில் இருந்து நடத்தி வைத்த ‘வின் டீஸல்’!!
மறைந்த ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் மகள் திருமண விழாவில், மணமகளுடன் பிரபல நடிகர் வின் டீஸல் நடந்து வந்த தருணத்தை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படம் மூலம் இந்திய ரசிகர்களின் மனம்கவர்ந்தவர்கள் நடிகர்கள் பால் வாக்கர் மற்றும் வின் டீஸல்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பால் வாக்கர் கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். இந்நிலையில், அவரது மகள் மிடோ வாக்கருக்கு நடைபெற்ற திருமணத்தில் தந்தை இடத்தில் நடிகர் வின் டீஸல், மணமகளுடன் மணமேடைக்கு வந்தது ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் முதல் ஆறு பாகங்களில் நடித்தவர் பிரபல நடிகர் பால் வாக்கர்.
இவர் கடந்த 2013-ம் ஆண்டில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.