17 வருடங்கள் முடிந்தும் கொஞ்சமும் குறையாத வலிகள்….. (நினைவேந்தல் புகைப்படங்கள்)!!

17 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில் யாரும் எதிர்பார்த்திராத பாரிய அழிவு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் ஆட்சே பகுதியில் இருந்து புறப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெற்ற சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலக வாழ் மக்களால் மறந்துவிட முடியாது. கடலுக்கடியில் உருவான அதிர்வெண் 9 தசம் 1 கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு அலைகள் கரைகளை தாக்கின. இந்த சுனாமியின் Read More

Read more

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து விபத்து….. பல்கலைக்கழக மாணவியொருவர் பலி – பலர் படுகாயம்!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கிய பேருந்து தடம் புரண்டு அருகிலுள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துத் தொடர்பில் தெரியவருகையில், மதவாச்சிக்கும் இகிரிகொல்லாவக்கும் இடைப்பட்ட வளைவில் 145வது மைல் கல்லிற்கு அருகில் உள்ள வளைவில் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் Read More

Read more

சுன்னாகத்தினைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை. சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார். குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் Read More

Read more

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! இருவர் கைது!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரினால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதித்தமை அங்கு நடைபெற்ற நிகழ்வு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

Read more