உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்ட பகுதிகள்!!!
4 மாவட்டங்களைச் சேர்ந்த 5 பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டம்
மாட்டுவாகல தோட்டத்தின் மேற்பிரிவு
கம்பஹா மாவட்டம்
ஹெந்தளை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம்
கொழும்பு மாவட்டம்
ஒபேசேகரபுர (514சீ) கிராம சேவகர் பிரிவு
நுவரெலியா மாவட்டம்
கொட்டியாகல தோட்டத்தின் கீழ் பிரிவு ஆகிய பிரதேசங்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.