#Srilanka

LatestNews

நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோகிராம் சீனி சுமார் 200 ரூபாய் உட்பட பல்வேறு விலைகளில் விற்பனை…. மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!!

இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனியை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் சில நாட்களாக சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் சீனி சுமார் 200 ரூபாய் உட்பட பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. எவ்வாறாயினும், நாட்டுக்கு தேவையான அளவு சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்றும் நாளையும் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் Read More

Read More
LatestNews

இணையவழியில் மாணவர்களுக்கு மனதளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வைத்தியர் எச்சரிக்கை

இணையத்தின் மூலமான கல்வி நடவடிக்கையால் மாணவர்கள் இணைய விளையாட்டுகளில் அதிகளவில் ஈர்க்கப்படுகின்றார்கள் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர். மேலும், பாடசாலை கல்வி முறை குறைவடைவதால் மாணவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர் வைத்தியர் தர்சனி ஹெட்டியாராச்சி (Darshani Hettiarachchi) சுட்டிக்காட்டுகிறார். இதேவேளை, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது, இணைய கல்வி முறையால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியைத் தொடர தயங்கலாம். மேலும் சில மாணவர்கள் Read More

Read More
LatestNews

பொது போக்குவரத்து சேவையை நிறுத்துங்கள்…. வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்!!

கொவிட் -19 தொற்றை கணிசமாக கட்டுப்படுத்தும் வரை பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதை மேலும் ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம்,விசேட (Dr. Hemantha Herath) தெரிவித்துள்ளார். பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது கொவிட் தொற்று மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் நாங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Read More
LatestNews

அடுத்த ஒரு மாதத்திற்குள் எரிபொருள், நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளது…. ஹர்ஷன ராஜகருண!!

தற்போது கோதுமை மாவு, எரிவாயு , பால்மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் விலைகள் உயர்ந்த நிலையில் இதுவரை உயர்த்தப்படாத அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளையும் அரசாங்கம் உயர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண(Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த ஒரு மாதத்திற்குள் எரிபொருள், நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் தேர்தலை நடத்தும் முடிவு Read More

Read More
LatestNews

நாளை காலை நான்கு மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் …. வெளியாகிய சுகாதார வழிகாட்டல்கள்!!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், நாளை (01) தளர்த்தப்படவுள்ள நிலையில், மக்கள் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தனவால் (Dr. Asela Gunawardana) இது வெளியிடப்பட்டுள்ளது. புதிய சுகாதார வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது உற்சவங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள், Read More

Read More
FEATUREDLatestNews

காலி போதனா மருத்துவமனையின் மருத்துவர்கள்,தாதியர்கள் உட்பட 195 பணியாளர்களுக்கு கொரோனா

காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் 195 ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களில் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்தார். ஓகஸ்ட் 01 முதல் செப்ரெம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் மருத்துவமனை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இந்த குழு அடையாளம் காணப்பட்டதாக மருத்துவமனை பணிப்பாளர் கூறினார். கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும்சிற்றூழியர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 21 கொவிட் நோயாளிகள் Read More

Read More
LatestNewsTOP STORIES

திடீரென முடக்கப்படட இடங்கள் – மீண்டும் படிப்படியாக முடக்கப்படுமா நாடு??

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10 மணி முதல் அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பகுதி முடக்கப்படவுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம் ரக்கீப் தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று இரவு முதல் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட்பிரவேசிப்பதும், மருதமுனையில் இருந்து வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நுவரெலியா Read More

Read More
LatestNews

நாட்டில் மீண்டும் பயணத்தடை அமுல்??

டெல்டா திரிபு வைரஸ் இலங்கையில் மேலும் தீவிரமடையக் சூடிய ஆபத்து உள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார். இந்நிலையில் பயணத்தடை விதிப்பது தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

கடந்தப்பட்ட நபர் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!!

கொழும்பு – நவகமுவ பகுதியில் களனி கங்கையில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 23ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNews

அதிகாலையில் நடந்த கோரம்! ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!!

யாகல பகுதியில் இருந்து பேமிரிய நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 3 இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மோட்டார் வாகனத்தில் மூவர் பயணித்துள்ளதுடன் அவர்கள் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் வாகன ஓட்டுனர் தப்பிச் சென்றிருந்த நிலையில் நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More