காலி போதனா மருத்துவமனையின் மருத்துவர்கள்,தாதியர்கள் உட்பட 195 பணியாளர்களுக்கு கொரோனா
காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் 195 ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களில் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்தார்.
ஓகஸ்ட் 01 முதல் செப்ரெம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் மருத்துவமனை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இந்த குழு அடையாளம் காணப்பட்டதாக மருத்துவமனை பணிப்பாளர் கூறினார்.
கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும்சிற்றூழியர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 21 கொவிட் நோயாளிகள் கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 06 கொவிட் இறப்புகள் நிகழ்ந்துள்ளன.