அதிகாலையில் நடந்த கோரம்! ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!!

யாகல பகுதியில் இருந்து பேமிரிய நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 3 இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோட்டார் வாகனத்தில் மூவர் பயணித்துள்ளதுடன் அவர்கள் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகன ஓட்டுனர் தப்பிச் சென்றிருந்த நிலையில் நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *