மது அருந்தி கொண்டிருக்கும் போதே கிளாசை தூக்கி எறியுங்கள்….. நடிகர் ‘அமிதாப்பச்சன்’ அதிரடி!!

சினிமாக்களை பார்த்து தான் இளைஞர்கள் புகைப்பிடிப்பதையும், மது குடிப்பதையும் கொண்டாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.

ஆனால்,

சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வந்தால் புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்,

உயிரை கொல்லும் என்ற வாசகமும்,

மது அருந்துவது போன்று காட்சி வந்தால் மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கானது என்ற வாசகமும் தவறாமல் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில்,

நடிகர் அமிதாப்பச்சன் தனது வலைதள பக்கத்தில் மது அருந்துவது, புகை பிடிப்பது ஆகிய பழக்கங்களை கைவிடுவது குறித்து பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என கூறப்படுகிறது.

அதில்,

மது அல்லது சிகரெட் பழக்கம் அவரவர் தனிப்பட்ட விஷயம் தான்.

ஆனாலும்,

அதை விட்டு விட நினைப்பவர்களுக்கு ஒரு அறிவுரை வழங்குகிறேன்.

அது எளிதான விஷயம்.

Last drops of alcoholமது அருந்தி கொண்டிருக்கும் போதே கிளாசை தூக்கி எறியுங்கள்.

இதற்கு நடுவில் சிகரெட்டை உதட்டில் இருந்து துப்பி அதற்கு விடை கொடுங்கள்.

இது தான் இரண்டு பழக்கங்களையும் கைவிடுவதற்கு சிறந்த வழி.

கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது முடியாத காரியம்.

இது புற்றுநோயை அகற்றுவது போல் இது செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *