அமெரிக்கா, மலேசியா, பிரித்தானியா மற்றும்சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால்….. கோட்டாவை சிங்கப்பூருக்குள் அனுமதித்ததற்கு எதிராக போராட்டங்கள்!!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூருக்குள் அனுமதித்தமைக்கு எதிராக
இன்று(19/07/2022) மலேசியா பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் உள்ள சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூருக்குள் அனுமதித்தமை குறித்து தனது நாட்டுக்கு எதிரான நிலைப்பாடுகள் உருவாகியுள்ளமை சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
இந்நிலையில்,
நாடுகடந்த அரசாங்கத்தின் அனுசரணையுடன் கோலாம்பூர் ,லண்டன் மற்றும் நியுயோர்க் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைப் பேரவை தனது உறுப்பு நாடுகளுக்கு முன்னர்
விடுத்திருந்த அறிக்கைக்கு அமைவாக சர்வதேச நியாயாதிக்கத்தின் அடிப்படையில் கோட்டாபய கைது செய்யப்படவேண்டும் எனும் கொட்டொலிகள் மலேசியாவில் இடம்பெற்ற போராட்டத்தில் எழுப்பட்டிருந்தன.
அதன் பின்னர்,
லண்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்துக்கு முன்னால் இன்று பகல் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.