சீனாவின் தடுப்பூசியை தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்த சிங்கப்பூர்!!

சீனாவின் சினோவாக் தடுப்பூசியை சிங்கப்பூரில் செலுத்திக் கொள்வோரை தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கணக்கிடவில்லை என்று அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வோர் மட்டுமே சிங்கப்பூரின் கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தியவர்களாக அந்நாட்டு அரசு கணக்கிட்டுள்ளது. சினோவாக் தடுப்பூசி குறித்து முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறாததால் அந்தத் தடுப்பூசியை தேசிய திட்டத்தில் சேர்க்கவில்லை என சிக்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை 37 லட்சம் மக்கள் பைஸர் அல்லது மொடர்னாவின் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 65% என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 9ம் திகதியுடன் நாட்டில் 3ல் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூரின் மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மேக் கூறுகையில், கடந்த மாதம் எடுக்கப்பட்ட கரோனா பாதிப்பு புள்ளிவிவரத்தின்படி, சினோவாக் தடுப்பூசி போட்டுக்கொண்டு பலருக்கும் மீண்டும் தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த தடுப்பூசியின் திறன் பற்றி எங்களுக்கு முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் இன்னமும் சினோவாக் தடுப்பூசி பெற்றவர்களை பொது நிகழ்ச்சிகளில் அனுமதிக்கும் முன் கரோனா தடுப்பூசி செலுத்துகிறோம்.

எங்கள் தடுப்பூசி திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் டெல்டா திரிபு வைரஸ்களையும் திறம்பட எதிர்கொள்வதாக இருக்கின்றன. இதில் சினோவேக் இன்னும் அதன் நம்பகத்தன்மையை நிரூப்பிக்கவில்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *