நாட்டில் பெரும் பெற்றோல் தட்டுப்பாடு….. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!!
பெற்றோல் பற்றாக்குறை காரணமாக நாட்டில் பெரும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இன்று முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டாலும்,
மீண்டும் பெற்றோல் கப்பல் கொள்வனவு செய்யப்படும் வரை போதியளவு பெற்றோல் கிடைக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் பல நாட்களாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள பெற்றோல் கப்பலை விடுவிக்க முடியாமல் போனதே பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும்,
கடுமையான டீசல் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், டீசல் கப்பல் ஒன்று தரையிறங்கும் பணி நேற்று இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.