வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பாக்குத்தெண்டலுடன் ஆரம்பம்!!

முல்லைத்தீவு  மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று(30.05.2022) அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்ற நிகழ்வானது தடை செய்யப்பட்டு, ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆலய சம்பிரதாய கிரிகைகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் ஆலய கிரிகைகள் சிறப்புற ஆரம்பமாகியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஆரம்ப Read More

Read more

மாவீரர் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவில் விதிக்கப்பட்டது தடை!!

எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி சரவணராஜா இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார். இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம் ஆகிய ஏழு காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையின் Read More

Read more

8 மில்லியன் ரூபா செலவில் அனர்த்த தடுப்பு செயற்திட்டங்கள் முல்லைத்தீவில்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 மில்லியன் ரூபா செலவில் அனர்த்த தடுப்பு செயற்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல் கட்டமாக இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளத்தின் கீழ் நீர்பாயும் பகுதி அனர்தத்தினை தடுக்கும் நோக்கில் புனரமைப்பு பணிகள் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. வவுனிக்குளத்தின் கீழ் வெள்ள அனர்த்தத்தில் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த புனரமைப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. செயற்திட்டத்தின் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் Read More

Read more

மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்ப பெண்ணெருவர் உயிரிழப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம்கொலனி பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Read more

முல்லையில் குண்டு வெடிப்பு சம்பவம்- விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட மேலுமொரு அபாயகர பொருள்!!

முல்லைத்தீவு சுவாமி தோட்டப் பகுதியில் குப்பைக்கு தீ மூட்டிய போது குண்டு வெடித்ததில் அங்கு பணியாற்றி வந்த ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லதைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை சுவாமி தோட்டம் தென்னந்தோட்டப் பகுதியில் குப்பைகளை கூட்டி எரித்த போதே குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்துள்ளது. அங்கு பணியாற்றி வந்த புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சபம்வம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு Read More

Read more

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதுடன் நிரந்தர அமைதியை ஏற்படுத்த நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் முள்ளிவாய்க்காலில் நடந்த சோகமான துயரத்தை நினைவுகூரும் அனைவருக்கும் என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.   முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அனுஷ்டிப்பு வாரத்தை முன்னிட்டு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர். இலங்கையின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இணை Read More

Read more

இரவோடு இரவாக உடைத்தெறியப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ! பெரும் பதற்றம்!!!!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கபட்டிருந்தது. இந்த நிலையில் பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்து நினைவுக்கல் நடுகை செய்யமுடியாது என தடை ஏற்படுத்தியிருந்தனர். இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் Read More

Read more

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பதற்றம்? பொலிஸ் – இராணுவத்தினர் குவிப்பு!!!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் “பொது நினைவுக்கல்” நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகள் நினைவாக ஆண்டுதோறும் மே மாதம் 12 முதல் 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளில் Read More

Read more

யாழில் கைதானவர்களுடன் தொடர்பு -புதுக்குடியிருப்பிலும் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நால்வருடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் வள்ளிபுனம் புதுக்குடியிருப்பு விலாசத்தை சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புனர்வாழ்வில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more

முல்லைத்தீவில் துயரம்! விவசாயிகள் மூவர் பரிதாபமாக பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மூன்று விவசாயிகளே மின்னல் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் குமுழமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை மத்தி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சுவர்னன், வற்றாப்பளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சுஜீவன் ஆகிய குடும்பஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

Read more