முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பதற்றம்? பொலிஸ் – இராணுவத்தினர் குவிப்பு!!!!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் “பொது நினைவுக்கல்” நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகள் நினைவாக ஆண்டுதோறும் மே மாதம் 12 முதல் 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மத தலைவர்களும் ஒன்று கூடியுள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்தில் வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.