அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நேற்று சிகிச்சை அளிக்க மறுத்தது பிரபல தனியார் வைத்தியசாலை….. உறுதிப்படுத்தினார் குறித்த வைத்தியசாலையின் மருத்துவர்!!

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நேற்றைதினம் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க மறுத்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை மருத்துவர் பேராசிரியர் ரணில் ஜயவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்கு காரணமான அமைச்சர்கள் பங்குபற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாக அமைச்சர் ரணதுங்கவை கலாநிதி ஜெயவர்த்தன பார்வையிட மறுத்ததாக சமூக ஊடகங்கள் தெரிவித்தன.

ஊடக நிறுவனமொன்றுக்கு தொலைபேசி ஊடாகப் பேசிய பேராசிரியர் ஜெயவர்தன இந்த ஊடகச் செய்திகளை உறுதிப்படுத்தியதுடன் எந்தவொரு நோயாளியையும் பார்க்கவோ அல்லது பார்க்க மறுக்கவோ தனக்கு உரிமை உண்டு என்று கூறினார்.

மேலும்,

கருத்து தெரிவித்த வைத்தியர் ஜயவர்தன,

தாம் முன்னர் இரண்டு தடவைகள் பார்த்திருந்த அமைச்சர் ரணதுங்கவை பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ள நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் வகையில் தான் அவரை பார்க்க மறுத்ததாக விளக்கமளித்தார்.

இதேவேளை,

சம்பவம் தொடர்பில் லங்கா ஹொஸ்பிடல்ஸ் கீழ்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *