#Medicine

LatestNewsTOP STORIES

பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தம்!!

மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை அரசாங்கத்தால் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால், கையிருப்பில் இருந்த மருந்துகள் தீர்ந்த நிலையில் மருந்து தட்டுப்பாடு ஏற்றப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனுதவியின் கீழ் அரசாங்கம் மருந்துகளை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
LatestNewsTOP STORIES

மருந்துகளுக்கான திருத்தப்படட விலைகளுடன் வெளியானது புதிய அதிவிசேட வர்த்தமானி!!

அறுபது வகையான மருந்துகளுக்கான விலையில் திருத்தம் மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் (Keheliya Rambukwella) வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டுச் சபை கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.   அதன்படி, 2019 ஆம் ஆண்டு அறுபது வகையான மருந்துகள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளிலே குறிப்பிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read More
LatestNewsTOP STORIES

‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகள் இலவசமாக….. காரணம் அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்வதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தடை Read More

Read More