மருந்துகளுக்கு தட்டுப்பாடு: சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை
சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையிலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடிதம் மூலம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. மேலும் சகல தரப்பினரையும் அழைத்து ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு மற்றும் மருத்துவ உபகரணங்களின் நிலை குறித்து பரிசீலிப்பது மிகவும் முக்கியம் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது .
இதேவேளை தொழில்நுட்ப குழுவொன்றை நியமித்து தற்போது ஏற்பட்டுள்ள மருந்து முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பரிந்துரைகளை உருவாக்குவது அவசியம் என்பதோடு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை பெறுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .