#Lockdown

LatestNews

முடங்குகிறதா இலங்கை? ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு!!

நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தயார் நிலையிலும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன்போது பேசிய ஜனாதிபதி, தடுப்பூசி திட்டத்தை முழு வேகத்தில் முன்னெடுக்கவும், மக்களுக்கு விரைவில் தடுப்பூசி போடவும் வலியுறுத்தியுள்ளார். நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற Read More

Read More
LatestNews

இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு! அரசாங்கம் அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும். சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமை, வீடுகளிலிருந்து வெளியேறுதல் ஆகியன Read More

Read More
LatestNews

07 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்!!

இரண்டு மாவட்டங்களின் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (08) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழுள்ள 05 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தின் மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

Read More
LatestNews

செப்டம்பர் வரை கட்டுப்பாடுகள் – ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு!!!!

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வு ஒன்றில் பேசியபோதே தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் செப்டம்பர் வரை நீடிக்கும் எனக் கூறினார். இந்த மாதம் மேலும் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. தடுப்பூசிகளை விரைவில் வழங்கி செப்டம்பர் மாதமளவில் நாட்டைத் திறக்க உத்தேசித்திருக்கின்றோம். தொடர்ந்தும் நாட்டை முடக்கிவைத்திருந்தால் மிகப்பெரிய பொருளாதார சவால்கள் ஏற்படலாம் என்றும் ஜனாதிபதி இதன்போது Read More

Read More
LatestNewsTOP STORIES

திடீரென முடக்கப்படட இடங்கள் – மீண்டும் படிப்படியாக முடக்கப்படுமா நாடு??

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10 மணி முதல் அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பகுதி முடக்கப்படவுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம் ரக்கீப் தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று இரவு முதல் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட்பிரவேசிப்பதும், மருதமுனையில் இருந்து வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நுவரெலியா Read More

Read More
LatestNews

பயணத் தடை தளர்வின் போது தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு!!

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 21ம் திகதி திங்கள் கிழமை தளர்த்தப்படவுள்ள நிலையில் தொடருந்து சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண தெரிவித்துள்ளார். எனினும் பேருந்து சேவைகள் தொடர்பாக இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 21ம் திகதி காலை நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 முதல் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் Read More

Read More
LatestNewsWorld

பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு!!

பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை அடுத்து, வர்த்தக நிலையங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் மதுபானசாலைகள் மீள திறக்கப்படுகின்றன. இன்றிலிருந்து (19) 6 பேர் வரை குழுவாக இணைந்து திறந்தவௌி உணவகங்களில் உணவருந்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் அமுலிலிருந்த ஊரடங்குச் சட்டம், இரவு 7 மணியிலிருந்து இரவு 09 மணி வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாளொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் புதிய எண்ணிக்கைக்கு மத்தியில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பில் பிரான்ஸின் மருத்துவ வல்லுநர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read More
LatestNews

மீண்டும் முழுநேரப் பயணத்தடை! இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 2 பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம், மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மே 25 செவ்வாய்கிழமை இரவு 11 Read More

Read More
LatestNews

அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருக்கும்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்!!

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார். இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரையில் இந்த பயணக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் மட்டும் மருந்துகளை விநியோகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் தொடர்பிலான நடைமுறை எதிர்வரும் 17ம் Read More

Read More
LatestNews

உடன் அமுலுக்கு வரும் வகையில் மற்றுமொரு பகுதி ‘லொக்டவுண்’

கண்டி மாவட்டத்திலுள்ள மற்றுமொரு பகுதியை முடக்குவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, கண்டி – பூஜாபிட்டி – கொஸ்கொட்டே பகுதியே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் 31 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நகரின் பூரணாவத்தை மேற்கு பகுதி ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More