07 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்!!
இரண்டு மாவட்டங்களின் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (08) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழுள்ள 05 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மாத்தளை மாவட்டத்தின் மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.