பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு!!

பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை அடுத்து, வர்த்தக நிலையங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் மதுபானசாலைகள் மீள திறக்கப்படுகின்றன.

இன்றிலிருந்து (19) 6 பேர் வரை குழுவாக இணைந்து திறந்தவௌி உணவகங்களில் உணவருந்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் அமுலிலிருந்த ஊரடங்குச் சட்டம், இரவு 7 மணியிலிருந்து இரவு 09 மணி வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் நாளொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் புதிய எண்ணிக்கைக்கு மத்தியில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பில் பிரான்ஸின் மருத்துவ வல்லுநர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *