#Lockdown

LatestNews

தொடர்ந்து முடக்கப்படும் ஸ்ரீலங்கா?? ஏற்றுக்கொள்ளப்படுமா ரணில் விக்ரமசிங்கவின் கருத்து!!

இலங்கையில் கொவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கு இலத்திரனியல் அட்டை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவது அவசியம் என முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் 2021ஆம் ஆண்டிற்கான அதிக பணவீக்க விகிதம் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.

Read More
LatestNews

ஊரடங்குச் சட்டம் நீடிப்புத் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

நாட்டை முடக்குவதால் எதனையும் சாதிக்கவில்லை. எனவே திங்கட்கிழமைக்கு பின்னர் நாடு முடக்கப்படும் என நான் கருதவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய  ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனியார் வானொலிக்கு அவர் வழங்கிய செவ்வியின் போது இதனை தெரிவித்துள்ளார். நாட்டைத் தொடர்ந்தும் மூடிவைப்பதா????? அல்லது சில தளர்வுகளுடன் ஊடரங்கை நீடிப்பதா???? தொடர்பில் இன்று கூடவுளடள கொவிட் 19 தடுப்புச் செயலணி தீர்மானிக்கும்.

Read More
LatestNews

தனிமைப்படுத்தல் சட்டத்தை தமக்கு சாதகமாக்கிய வர்த்தகர்கள் – சீனி விற்பனையில் மோசடி!!

வவுனியாவில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். நாடு முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மக்கள் வர்த்தக நிலையங்களில் குவிந்து பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர். இந்நிலையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் சில வர்த்தக நிலையங்களில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வவுனியா நுகர்வோர் அதிகார சபையிடம் சில நுகர்வோர் முறைப்பாடுகளை தெரிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

இம்முறை 5000 இல்லை – இராஜாங்க அமைச்சர் தகவல்!!

நாடு முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க முடியும் என்று தான் நினைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், 2,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படலாம் என்று தான் கருதுவதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

சற்றுமுன் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காக 10 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக சற்றுமுன் ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர், 30 வயதிற்கு மேற்பட்ட 43 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 98 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தியுள்ளோம். அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதிக்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி Read More

Read More
LatestNews

ஊரடங்கு தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள மற்றுமொரு அறிவிப்பு!!

இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். எனினும், குறித்த காலப்பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகளான மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்க முடியும். இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான வேலைத்திட்டம் சுகாதாரத் துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இன்று இரவு பத்து மணி முதல் Read More

Read More
LatestNews

முடங்குகிறது நாடு- வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் தற்போது கட்டுக்கடங்காது அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பபட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் Read More

Read More
LatestNews

தேரர்களின் வலியுறுத்தல்- தயாராகும் கோட்டாபய!!

#கொரோனாத் தொற்றும் மரணமும் அதிகரித்துச் செல்வதால் நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோட்டாபய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, விசேட உரையொன்றையும் நிகழ்த்த ஜனாதிபதி தயாராகிவருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் நேற்றும் இது தொடர்பாக வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை Read More

Read More
LatestNews

அரச ஊழியர்கள் சம்பளத்தின் பாதியை விட்டுக்கொடுத்தால் நாட்டை முடக்கத் தயார் – இராஜாங்க அமைச்சர் தகவல்!!

இலங்கையை முழுமையாக இரண்டு வாரங்கள் முடக்க வேண்டுமாயின் அரச ஊழியர்கள் தங்களது மாதாந்த சம்பளத்தில் சரிபாதியை அரசாங்கத்திற்கு அன்பளிப்பு செய்ய வேண்டும் என தேசிய வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். நாட்டை முடக்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், “ஒவ்வொரு தரப்பினரும் நாட்டை மூடுமாறு யோசனை முன்வைக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரச ஊழியர்களும் மாத சம்பளத்தில் சரிபாதியை விட்டுக் Read More

Read More
LatestNews

புதிய விகாரங்கள் கண்டுபிடிப்பு!! கொழும்பை மூடுங்கள் – அவசர கோரிக்கை!!

கொழும்பில் உள்ள மருந்தகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கனைத் தவிர அனைத்து கடைகளையும் சில நாட்களுக்கு மூடுமாறு கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு செய்வதால் கொழும்புக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இதனால் அவர்களின் குடும்பங்கள் மற்றும் பிற சமூகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவலால் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக சமூகம் தமக்கு ஏற்படும் இழப்புகளை புறக்கணித்து, தாமாக முன்வந்து கடைகளை மூடி, Read More

Read More