சற்றுமுன் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காக 10 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்காக சற்றுமுன் ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
30 வயதிற்கு மேற்பட்ட 43 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 98 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தியுள்ளோம்.
அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதிக்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க எதிர்ப்பார்த்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரம் அல்ல எனவும் நாட்டை சிக்கலுக்குள் தள்ள வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நாட்டை நீண்ட நாட்ளுக்கு மூட வேண்டியேற்படின் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.