பிரான்ஸ் புதிய அதிபர் “இம்மானுவேல் மெக்ரான்” மூலம் அந்தநாட்டு அரசியலில் பல திடீர் மாற்றங்கள்!!

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ‘இம்மானுவேல் மெக்ரான்'(Emmanuel Macron) இரண்டாவது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து பிரான்ஸ் அரசில் மாற்றங்களைக் கொண்டு வர அவர் முடிவு செய்தார்.

 

இதன் அடிப்படையில்,

பிரான்ஸ் பிரதமர் ‘ஜீன் காஸ்டெக்ஸ்’ (Jean Castex) நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.

முந்தைய அரசில் தொழிலாளர் அமைச்சராக பதவி வகித்து வந்த ‘எலிசபெத் போர்ன்’ (Elisabeth Borne) தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் வெளியிட்டுள்ளார்.

61 வயதான Borne, பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் பேசிய Elisabeth Borne இந்த நியமனத்தை அனைத்து சிறுமிகளுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்றும்,

உங்கள் கனவுகளின் பின் செல்லுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர்,

பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை செயற்படுத்துவதை விரைவுபடுத்துவார் என் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

அதிபரும் புதிய பிரதமரும் பிரான்ஸ் புதிய அரசில் பங்கேற்கும் அமைச்சரவை குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *