அனுஷ்காவுடன் உணவகத்துக்குச் சென்ற கோலி – வைரலாகும் புகைப்படம்!!
இந்தியா – இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்றது.
இந்த டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் லண்டனில் உள்ள டெண்ட்ரில் கிச்சன் என்கிற வீகன் உணவகத்துக்கு மனைவி அனுஷ்கா சர்மா, மகள் வாமிகாவுடன் சென்று மதிய உணவருந்தியுள்ளார் கேப்டன் கோலி.
மிகச்சிறந்த வீகன் உணவு என இன்ஸ்டகிராமில் அந்த உணவகத்தைப் பாராட்டியுள்ளார் அனுஷ்கா சர்மா.
கோலி, அனுஷ்காவுடன் இணைந்து உணவகத்தின் செஃப் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டெண்ட்ரில் கிச்சன் உணவகம் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.