LatestNews

உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம்….. அசேல சம்பத்!!

இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டமையினால் உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் (Asela Sampath) தெரிவித்துள்ளார்.

உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்கு கட்டாயம் எரிவாயு அவசியம் எனவும் உணவகங்களில் எரிவாயு அடுப்புகள் மாத்திரமே உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

எரிவாயு கலவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட சிலிண்டர்களின் விநியோகத்தை மாத்திரம் நிறுத்துமாறு லிட்ரோ நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.

இல்லை என்றால் இன்று முதல் உணவக உணவு விநியோகம் முழுமையாக முடங்கிவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,

நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்கு 20 இடங்களில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த மாதம் 4ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 116 சிலிண்டர்கள் வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *