#Hospital

LatestNews

கருத்து முரண்பாட்டால் தமையனின் காதை கடித்த தம்பி- மண்டையை பதம்பார்த்த அண்ணன்!!

தென்மராட்சி-நாவற்குழிப் பகுதியில் அண்ணன், தம்பி இடையே இடம்பெற்ற மோதலில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். நாவற்குழிப் பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் அண்ணனின் காதை தம்பியார் கடித்து காயப்படுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த அண்ணன் அருகில் இருந்த தராசினை தூக்கி தம்பியின் தலையில் தாக்கியுள்ளார். தலை மற்றும் காதுப் பகுதியில் படுகாயமடைந்த 32 மற்றும் 37 வயதான சகோதரர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். Read More

Read More
LatestNews

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது!!

நிறைவுகாண் மற்றும் இடைநிலை மருத்துவ சேவையில் ஈடுபடும் 15 தொழிற்சங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (05) காலை ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையினால் வைத்தியசாலைகள் பலவற்றில் சிகிச்சைகள், மருந்து விநியோகம், ஆய்வுகூட சேவைகள், கதிரியக்க பரிசோதனைகள் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் சேவைகளைப் பெறுவதற்காக சென்ற நோயாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனிடையே, நேற்று மாலை சுகாதார அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லையென நிறைவுகாண் மற்றும் இடைநிலை மருத்துவ ஊழியர்களின் ஒன்றிணைந்த அமைப்பின் Read More

Read More
LatestNews

மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு!!

அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலும் உள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை இதற்கு முன்னர் 61 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

மலேசியாவில் நடந்த முதல் கோர விபத்து! 200இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்!!

##மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று உள்ளூர் நேரம் இரவு 8:45 மணிக்கு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,   ஒரே ஒரு ரயில் கட்டுப்பாட்டாளருடன் சோதனை ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ரயில், பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றொரு ரயிலில் மோதியது. பிரசாரனா மலேசியா பெர்ஹாடடால் இயக்கப்படும் இரு ரயில்களும் கம்புங் பாரு மற்றும் கே.எல்.சி.சி நிலையங்களுக்கு Read More

Read More
LatestNews

கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியான சுற்று நிருபம்!!

வைத்தியசாலைகளுக்கு அழைத்து வரப்படுகின்ற கொரோனா தொற்றாளர்கள் 15 – 30 நிமிடங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சுற்று நிருபமொன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அனுமதிப்பதற்கு வைத்தியசாலைகள் தாமதிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் பலர் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர். இந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, பாணந்துறை வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களை வைத்தியசாலை வார்டுக்களில் தரையில் வைக்கப்பட்டிருந்தது Read More

Read More
CINEMAindiaLatestNews

மருத்துவமனையில் இருந்து கொமடி நடிகர் செந்தில் வெளியிட்ட காணொளி…. கொரோனா குறித்து உடைத்த பல உண்மை

காமெடி நடிகர் செந்தில் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனையில் இருந்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளியில், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கின்றேன். கொரோனா வந்தால் யாரும் பயப்படத் தேவையில்லை. டெஸ்ட் எடுத்து விட்டு வீட்டில் நீங்கள் தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவர்கள் கூறும் மருந்து மாத்திரைகளை சரியாக சாப்பிடுங்கள். எனக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால் அதிக அளவு பாதிப்பு Read More

Read More
CINEMALatestNews

தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் விவேக் திடீரென அனுமதி- ரசிகர்கள் ஷாக்

சினிமாவில் எல்லாராலும் மக்களை சிரிக்க வைத்துவிட முடியாது. ஆனால் சாதாரணமாக காமெடி செய்யாமல் அதில் ஒரு கருத்தை வைத்து காமெடி செய்து மக்களுக்கு விழப்புணர்வும் ஏற்படுத்தி வந்தவர் நடிகர் விவேக். நேற்று தான் இவர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அனைவரையும் நோயில் இருந்து காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி போடுமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு இன்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் Read More

Read More
LatestNews

மர்மமான முறையில் உயிரிழந்த தாயும் மகனும்! கொலையா? தீவிர விசாரணையில் பொலிஸார்

பொலன்னறுவை – பிஹிடிவெவ – நுவரகல பிரதேசத்தில் உடலில் விஷமேறியமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 6 வயதுடைய மகனும் 28 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருடைய மூன்று வயது மகனின் உடலிலும் விஷமேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Read More
LatestNews

கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது தொற்று நோய் விசேட மருத்துவமனை!

கிளிநொச்சியில் வடக்கிற்கான தொற்றுநோய் விசேட மருத்துவமனை, கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கென விளையாட்டு மைதானம் பிரார்த்தனை மண்டபம் நூலகம் உள்ளக விளையாட்டரங்கம் திறந்த வெளித் திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் நீண்ட காலம் தங்கநேரிடுபவர்கள் தாம் விரும்பிய உணவு பானங்கள் உள்ளிட்ட (புகையிலை மற்றும் மதுசாரம் தவிர்ந்த) பாவனைப் பொருட்களை அவர்களாகவே வெளியிலிருந்து இணையத்தளம் ஊடாக வாங்கிக் கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். தற்போது Read More

Read More