மலேசியாவில் நடந்த முதல் கோர விபத்து! 200இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்!!

##மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று உள்ளூர் நேரம் இரவு 8:45 மணிக்கு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

 

ஒரே ஒரு ரயில் கட்டுப்பாட்டாளருடன் சோதனை ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ரயில், பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றொரு ரயிலில் மோதியது.

பிரசாரனா மலேசியா பெர்ஹாடடால் இயக்கப்படும் இரு ரயில்களும் கம்புங் பாரு மற்றும் கே.எல்.சி.சி நிலையங்களுக்கு இடையில் ஒரு சுரங்கப்பாதையில் மோதியபோது மணிக்கு 40 கி.மீ (சுமார் 25 மைல்) வேகத்தில் பயணித்ததாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Fire & Rescue personals gather outside a shopping mall to help injured passengers at KLCC station after an accident involving Kuala Lumpur Light Rail Transit (LRT) trains in Kuala Lumpur, Malaysia, Monday, May 24, 2021. (AP Photo)

இந்த விபத்தின் போது சுமார் 166பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகி கோலாலம்பூர் மருத்துவமனை உட்பட அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். நாற்பத்தேழு பயணிகள் பலத்த காயமடைந்தனர் என்று மாநில ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

கடந்த 23 ஆண்டில் மலேசியாவில் மெட்ரோ ரயிலில் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது இதுதான் முதல் தடவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *