#Flight

LatestNews

வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லத் தயாராகவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அந்நிய செலாவணி செயலணியின் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக கேள்வி காணப்படுவதால், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இதற்கமைய, தற்போது வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு, Read More

Read More
LatestNews

பாரிஸ் இற்கு இனி நேரடி விமான சேவையை முன்னெடுக்கவுள்ள Sri lankan Airlines!!

சிறிலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, 297 இருக்கைகளுடன் கூடிய ஏயார் பஸ் ஏ330-300 என்ற விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அனைத்து புதன் , வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிரான்ஸுக்கான விமான ​சேவை இடம்பெறும் என சிறிலங்கன் விமான சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read More
LatestNewsWorld

நவம்பர் 4 முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவை வழங்கும் ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனம்!!

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இலங்கைக்கான நேரடி விமான சேவையை வெளிநாடொன்றின் விமான நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி ரஷ்யாவின் எரோபுளொட் (Aeroflot) என்ற விமான சேவை நிறுவனமே எதிர்வரும் நவம்பர் 4 ஆம்திகதி முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. ரஷ்யாவின் ஏரோபுளொட் விமான நிறுவனத்துக்கும் இலங்கையின் விமான நிலைய மற்றும் விமான நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று நடந்த சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. Read More

Read More
LatestNews

வெளிநாட்டிலிருந்து இலங்கை வர காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி !!!!

வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நீக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. எனினும், கடந்த 14 நாட்களுக்குள் இலங்கையிலிருந்து இந்தியா சென்றவர்கள் மீண்டும் நாடு திரும்ப தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானசேவைகள் அதிகார சபைத் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார். அவ்வாறே, இலங்கை வரும் விமானமொன்றில் 75 பயணிகள் மாத்திரமே இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக சிவில் விமான சேவைகள் Read More

Read More
indiaLatestNews

இலங்கை விரைகிறது டோர்னியர்(Dornier) ரக விமானம்!!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது. குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ கப்பலின் கட்டுப்பாட்டுப் பிரிவிற்குள்ளும் பரவியதாக இன்று மாலை இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீயில் கப்பலில் பணியாற்றிய இரண்டு இந்தியப் பிரஜைகள் காயமடைந்ததோடு, மேலும் 25 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த இந்தியாவின் அவசர தீ விபத்தின்போது நீர்த்தாரை தூவுவதற்குப் பயன்படுத்தப்படும் Read More

Read More
LatestNews

நாளை நள்ளிரவு முதல் கட்டுநாயக்க விமானநிலைய பயணிகள் வருகை தரும் பகுதிக்கு பூட்டு!!!!

நாளை 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் உட்பிரவேசிக்கும் முனையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் நாட்டிற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் நாட்டிலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு திட்டமிடப்பட்டவாறு சேவைகள் வழங்கப்படும் என சிவில் விமான சேவை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் சரக்கு விமான சேவைகள் முறையாக இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read More
LatestNews

21 ஆம் திகதி நள்ளிரவு முதல் அனைத்து விமான சேவைகளும் இரத்து!!

மே மாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச குறிப்பிட்டார்.

Read More
LatestNews

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசமாக சிக்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர்!

போலி விசாவை பயன்படுத்தி டுபாய் வழியாக ஜெர்மனி மற்றும் கனடா செல்ல முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் இன்று காலை காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கனடாவுக்கு செல்ல முயற்சித்த 35 வயதான சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரும், ஜேர்மன் செல்ல முயற்சித்த 29 வயதான பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். “ஃப்ளை டுபாய்” விமானத்தில் டுபாய்க்கு செல்ல இருவரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். இதன்போது இருவரினதும் Read More

Read More
LatestNews

விமான நிலையங்கள் திறக்கப்பட்டதால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகள்

சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டின் விமான நிலையம் திறக்கப்படுவதால், எதிர்காலத்தில் சுற்றுலாத் துறை தொடர்பான பல துறைகளில் வெற்றிகரமான பலன்களைப் பெற முடியும் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கூறியுள்ளார். கொரோனா பரவலால் மூடப்பட்ட இலங்கையின் விமான நிலையம் இம்மாதம் 21 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்கள், பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் நினைவு பரிசு கடைகள் Read More

Read More
LatestNews

இலங்கை வருகிறது விசேட விமானம்!

கொரோனா பரவலுக்கு மத்தியில் நாட்டை மீண்டும் திறக்கும் செயற்திட்டத்தின் கீழ் இன்று யுக்ரைனில் இருந்து 200 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட உள்ளனர் என்று விமான மற்றும் விமானசேவைகள் துறையின் தலைவர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். இந்த சுற்றுலா பயணிகள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான தளத்தில் தரை இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்குள் கொரோனா பரவலையடுத்து நாட்டை மீண்டும் திறக்கும் செயற்திட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் முதற்கட்டமாகவே இன்று உக்ரைனிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு Read More

Read More