சூரியனின் மேற்பரப்பில் வட துருவத்தைச் சுற்றி சூறாவளி….. அபூர்வ காணொளி வெளியிட்ட NASA – திகைத்துப்போன விஞ்ஞானிகள்!!
விஞ்ஞானிகள் திகைத்துப்போகும் அளவிற்கு சூரியனில் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
சூரியனை எப்போதும் வானியலாளர்கள் ஆராய்ந்து வரும் நிலையில்,
தற்போது உருவாகியுள்ள ஒரு புதிய விடயம் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூரியனின் ஒரு பெரிய பகுதி அதன் மேற்பரப்பில் இருந்து உடைந்து அதன் வட துருவத்தைச் சுற்றி ஒரு சூறாவளி போன்ற சுழற்சியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது எப்படி நிகழ்ந்தது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முயன்றாலும் அதன் காணொளி விண்வெளி சமூகத்தை திகைக்க வைத்துள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு நாசாவின் ஜேம்ஸ் வெப்(James Web) தொலைநோக்கி மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும்,
கடந்த வாரம் விண்வெளி வானிலை முன்னறிவிப்பாளரான வைத்தியர் தமிதா ஸ்கோவ் டுவிட்டரில் குறித்த காணொளியை பகிர்ந்துள்ளார்.
சூரியன் எப்போது அதன் தீப்பிழம்புகளை வெளியிடுகிறது.
இது சில நேரங்களில் பூமியில் உள்ள தகவல்தொடர்புகளை பாதிக்கிறது.
எனவே,
விஞ்ஞானிகள் சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்தின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் இதுபோன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
சூரியன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டாலும் இந்த மாதம் பூமியில் தகவல் தொடர்புக்கு இடையூறு விளைவித்த பல சக்திவாய்ந்த தீப்பிழம்புகளின் வெளிப்பாடு ஆச்சிரியமூட்டும் நிகழ்வாக மாறியுள்ளது.