நவம்பர் 4 முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவை வழங்கும் ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனம்!!
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இலங்கைக்கான நேரடி விமான சேவையை வெளிநாடொன்றின் விமான நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி ரஷ்யாவின் எரோபுளொட் (Aeroflot) என்ற விமான சேவை நிறுவனமே எதிர்வரும் நவம்பர் 4 ஆம்திகதி முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
ரஷ்யாவின் ஏரோபுளொட் விமான நிறுவனத்துக்கும் இலங்கையின் விமான நிலைய மற்றும் விமான நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று நடந்த சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
ரஷ்ய ஏரோபுளொட் நிறுவனம் நேற்று முதல் இலங்கைக்கான விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த போதிலும், நிலவும் சூழ்நிலை காரணமாக தீர்மானம் பிற்போட்டப்பட்டது.