இலங்கை வருகிறது விசேட விமானம்!

கொரோனா பரவலுக்கு மத்தியில் நாட்டை மீண்டும் திறக்கும் செயற்திட்டத்தின் கீழ் இன்று யுக்ரைனில் இருந்து 200 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட உள்ளனர் என்று விமான மற்றும் விமானசேவைகள் துறையின் தலைவர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றுலா பயணிகள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான தளத்தில் தரை இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்குள் கொரோனா பரவலையடுத்து நாட்டை மீண்டும் திறக்கும் செயற்திட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் முதற்கட்டமாகவே இன்று உக்ரைனிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வரவிருக்கின்றனர்.

இவர்களுக்காக ஏற்கனவே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் அதேபோல் மத்தள விமான நிலையமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு என இலங்கை மக்களுடன் நெருங்கிப் பழகாத வகையில் சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த இடங்களில் மாத்திரமே இந்த சுற்றுலா பயணிகள் தங்கியிருந்து தமது சுற்றுலாவை மேற்கொள்ள முடியும் என இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்திருக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *