#Covid19

LatestNews

ஐம்பது லட்சம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்தி திட்டம்! அரசாங்கம் அறிவிப்பு!!

ஐம்பது லட்சம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்குள் இந்த தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல் கட்டமாக மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் கிடைக்கப் பெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு ஆணைக்குழு கடந்த மாதம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்வரும் இரண்டு மாதங்களில் 2 Read More

Read More
LatestNews

மதுபானக் கடைகள் மூடப்படுவதால் இலங்கை அரசுக்கு ஒரு நாளைக்கு 100 கோடி இழப்பு!!!!

மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதனால் ஒரு நாளில் அரசாங்கம் நூறு கோடி ரூபாவினை இழப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நிதி அமைச்சு வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கப்பெறும் நிறுவனங்களில் தேசிய இறைவரி திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்திற்கு அடுத்தபடியாக மதுவரித் திணைக்களத்தின் ஊடாக வருமானம் ஈட்டப்படுகின்றது. நீண்ட நாட்களுக்கு மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் அரசாங்கத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளது. பயணத்தடை காலம் முடியும் வரையில் அனைத்து மதுபான Read More

Read More
LatestNews

பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் – அஜித் ரோஹண தகவல்!!

எதிர்வரும் 7 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று காலை தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த சில நாட்களில் மக்கள் செயற்படும் விதம், பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமையும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது. ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் தான் இந்த குறைவுக்கு காரணம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை Read More

Read More
LatestNews

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோரை கைது செய்ய முடியாது – சுமந்திரன் எம்.பி!!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோரை கைது செய்ய முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா அரச தரப்பின் உதவியுடன் யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதை மிகுந்த கவலையுடன் நினைவுகூருவதாக குறிப்பிட்டார். இதன்போது, ஸ்ரீலங்கா வாழ் மக்களுக்காக புலம்பெயர் சொந்தங்கள் கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கொள்வனவு செய்து வழங்க முன்வந்துள்ளமைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் Read More

Read More
LatestNews

இலங்கையில் பெண்களின் இறப்பு எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு!!!!

தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனாவின் மூன்றாவது அலையால் இலங்கையில் பெண்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் இதை தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனாவின் முதல் அலையால் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். எனினும் தற்போது பெண்களிடையே இறப்புகளின் எண்ணிக்கை அதிகம் என்று கூறியுள்ளார். மேலும், கோவிட் தொற்றுநோயால் இறக்கும் பல பெண்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது, இதய நோய் போன்ற தொற்றுநோயற்ற நோய்களும் உள்ளன. சில Read More

Read More
LatestNews

கொரோனா வளிமண்டலத்தில் பரவுகிறதா? விசேட வைத்திய நிபுணர் விளக்கம்!!

கொவிட் வைரஸ் வளிமண்டலத்தில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கதை வெறும் மாயையாகும் என்று வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கொவிட் வைரஸ் வளிமண்டலத்தில் பரவுவதாக வெளியான செய்தி தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, எந்தவொரு வைரஸும் வெளிச்சூழலில் பெருகுவதற்கு ஒருபோதும் இயலாது. கொவிட் வைரஸ் வளிமண்டலத்தில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கதை வெறும் மாயையாகும். அதற்கான எந்தவொரு விஞ்ஞான ரீதியிலான Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNews

37 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனாவிடம் இருந்து தப்பிய ரஜினி! மில்லியன் பேரை குபீரென்று சிரிக்க வைத்த காட்சி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 37 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிவிட்டதாகக் கூறி ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது அவர் நடித்த பட வீடியோ தான். கொரோனாவின் இரண்டாம் அலை எப்பொழுது தான் ஓயுமோ என்கிற மனநிலைமையில் பலரும் இருக்கிறார்கள். இந்நிலையில் மூன்றாவது அலை வேறு வரும் என்ற பேச்சால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். கடவுளே, பழையபடி நாங்கள் சந்தோஷமாக வாழ்வது எப்பொழுது, வைரஸ் பயமில்லாமல், மாஸ்க் இல்லாமல் நடமாடுவது எப்பொழுது Read More

Read More
LatestNews

வீட்டில் திடீரென மரணமடைந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வீட்டில் திடீரென மரணமடைந்தவருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கிண்ணியா பைசல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒருவர் தீடீரென வீட்டில் மரணமடைந்துள்ளார். பின்னர் அவருக்கு செய்யப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். குறித்த நபர் 70 வயதுடைய ஆண் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு  Prostate சத்திரசிகிச்சை 2017 இல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உயர் குருதி அழுத்தம் இருந்து வந்தமையும் அவரது மருத்துவ சான்றுகளிலிருந்து Read More

Read More
LatestNews

மேலும் 1 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கை வருகிறது!!!!

சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ளது. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தினால் இந்த தடுப்பூசிகள் சீனாவிடம் கோரப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி குறித்த தடுப்பூசிகள் சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த சினோபார்ம் தடுப்பூசிகள் ஜூன் மாதத்திலேயே மக்களுக்கு ஏற்றப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Read More