மேலும் 1 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கை வருகிறது!!!!
சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தினால் இந்த தடுப்பூசிகள் சீனாவிடம் கோரப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி குறித்த தடுப்பூசிகள் சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த சினோபார்ம் தடுப்பூசிகள் ஜூன் மாதத்திலேயே மக்களுக்கு ஏற்றப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.