இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைஸர் தடுப்பூசி??
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு தடுப்பூசி செலுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பைஸர் போன்ற தடுப்பூசியே சிறுவர்களுக்கு பொருத்தமானதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்களின் சங்கத்தினர் இது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளனர்.
தொற்றா நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துமாறு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இந்த விடயம் குறித்து கலந்துரையாடி எதிர்வரும் நாட்களில் தீர்மானமொன்றை எட்டவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.