#Corona

LatestNews

மேலும் பல இறுக்கமான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ள சுகாதார அமைச்சு!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. குறித்த வழிகாட்டல்களுக்கு அமைவாக நேற்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உடற்பயிற்சிக் கூடங்கள், உடற்கட்டமைப்பு நிலையைங்கள், மசாஜ் பார்லர்கள், சிறுவர் பூங்காக்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், கடற்கரையில் ஒன்றுகூடுதல், நீச்சல்தடாகங்களைப் பயன்படுத்துவதற்கும், எதிர்வரும் 31ஆம் திகதிவரை தடை விதிக்கப்படுவதாக புதிய சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
LatestNews

வடமாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரனிற்கு Covid19 உறுதி!!

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த சமயத்தில், அவருடன் பழகியவரென்ற அடிப்படையில், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More
LatestNews

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கடடாயம்!!

2021 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக 9 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

Read More
LatestNewsWorld

சீனாவுடன் கைச்சாத்தானது மற்றுமோர் உடன்படிக்கை!!

agreement கடுமையான அந்நிய செலாவணி இருப்புத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில் 61.5 பில்லியன் ரூபா பெறுமதியான உடன்படிக்கையொன்றை சீனாவுடன் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்துகொண்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாக கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சீன அபிவிருத்தி வங்கி மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கமும் 61.5 பில்லியன் ரூபா உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக ஸ்ரீலங்காவுக்கான சீன தூதரகம் தெரிவிக்கின்றது. இரண்டு வருட குத்தகை அடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன Read More

Read More
LatestNews

தடுப்பூசியை செயலிழக்கச்செய்யும் புதிய வைரஸ் இலங்கையில் உருவாகும்! இறுதியில் ஏற்படப்போகும் ஆபத்து!!

இலங்கையில் இந்த ஆண்டின் இறுதியில் தற்போதைய தடுப்பூசியை செயலிழக்கச்செய்யும், கொரோனா வைரஸின் புதிய கடுமையான திரிபு உருவாகும் ஆபத்து காணப்படுகின்றது. புதிய கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஒரு ஆபத்தான அச்சுறுத்தலை நாங்கள் எதிர்கொள்கிறோம் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு கொரோனா தொற்றுநோயின் 4 வது அபாய நிலையில் இருப்பதாகவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது. மேலும், இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சங்கத்தின் செயலாளர் டாக்டர் செனால் பெர்னாண்டோ வலியுறுத்துகிறார். Read More

Read More
LatestNews

வீட்டில் பராமரிக்க திட்டம்!!

இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ,கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டமானது இலங்கையின் மேல் மாகாணத்தில் மட்டும் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டமானது தற்போது ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை முதல் Read More

Read More
LatestNews

நல்லூர் திருவிழாவிற்கான வீதித் தடை விவகாரம்- யாழ்.முதல்வர் பொலிஸாரிடையே கலந்துரையாடல்!!

நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்தை சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசேட ஊடக அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து ஆலயத்தை சூழவுள்ள வீதித்தடைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் யாழ்ப்பாண பொலிஸாருடன் இன்றைய தினம் நேரடியாக களத்திற்குச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். விசேட திருவிழாக்கள் மற்றும் பூசை நேரங்களை தவிர மீதி நேரங்களில் வீதிக் கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தவும் பொதுமக்களை ஆலய Read More

Read More
LatestNews

பொது முடக்கத்திற்குள்ளாகிறதா நாடு?? தென்னிலங்கை ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்!!

நாட்டை முடக்குவது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா மற்றும் திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவலின் தீவிரம் காரணமாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் கடும் சுகாதார பாதுகாப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வார இறுதியில் இந்த முடக்கம் அமுலுக்கு வரலாமெனவும், இந்த முடக்கம் சுமார் ஒரு மாத காலம்வரை நீடிக்குமெனவும் சுகாதாரத் துறையின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் தென்னிலங்கையில் இயங்கும் Read More

Read More
LatestNewsWorld

ஆபத்தான பட்டியலில் இலங்கை உள்ளிட்ட 15 நாடுகள்! கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஹாங்காங் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பங்களாதேஷ், கம்போடியா, பிரான்ஸ், கிரீஸ், ஈரான், மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின், இலங்கை, சுவிட்சர்லாந்து, தான்சானியா, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாகளுக்கே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய தரவுகளின் படி, 15 நாடுகளில் இருந்து ஹாங்காங்கில் நுழையும் பயணிகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தாலும், 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு Read More

Read More
LatestNews

இலங்கையில் கொரோனா மரணங்கள் உச்சம் தொட காரணம் என்ன??

கொவிட் பரவுவதை கட்டுப்படுத்த சமூகத்தில் பொது சுழற்சியை 80% முதல் 90% வரை குறைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், நாடு கொவிட் 4 ஆம் இடர் நிலையில் இருப்பதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. நாட்டின் தடுப்பூசி செயல்முறை, அறிவியல் முறையின் எல்லைக்கு வெளியே செயற்படுத்தப்பட்டமையே, மரண எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு காரணம் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More