#Corona

LatestNews

இலங்கை முழுவதும் 209 மருத்துவர்களுக்கு கொரோனா! பலர் அவசர சிகிச்சைப்பிரிவில்!!

நாடளாவிய ரீதியில் 209 மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 30 – 40 மருத்துவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரு மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, கொரோனா வைரஸ் பாதிப்பால் மூன்று மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கேகாலை பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் ராகம மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் Read More

Read More
LatestNews

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் கொரோனா!!

சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜே.விஜேசூரியா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாளாந்தம் சுமார் 25 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். இதேவேளை, பெற்றோர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டாலும் கூட, தமது குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Read More
LatestNews

உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயரதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!!

எந்தளவு கொரோனா தொற்று நோயாளிகளை வைத்தியசாலைகளில் தங்க வைக்க முடியுமென்பது தொடர்பில் முழு விபரங்களுடனான அறிக்கையொன்றை உடனடியாக தமக்குப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே இது தொடர்பில் ஜனாதிபதி முழுமையான அறிக்கையை கோரியுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு Read More

Read More
LatestNews

இன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று  நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா பரவல், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டை முடக்குவதில் உள்ள சிக்கல் நிலை என்பன தொடர்பில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம், ஜனாதிபதி நாளைய தினம் கண்டிக்கு சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து, நாட்டின் நிலைமை குறித்து தெளிவுபடுத்த உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், ஜனாதிபதி, நாட்டு Read More

Read More
LatestNews

புதிய விகாரங்கள் கண்டுபிடிப்பு!! கொழும்பை மூடுங்கள் – அவசர கோரிக்கை!!

கொழும்பில் உள்ள மருந்தகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கனைத் தவிர அனைத்து கடைகளையும் சில நாட்களுக்கு மூடுமாறு கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு செய்வதால் கொழும்புக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இதனால் அவர்களின் குடும்பங்கள் மற்றும் பிற சமூகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவலால் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக சமூகம் தமக்கு ஏற்படும் இழப்புகளை புறக்கணித்து, தாமாக முன்வந்து கடைகளை மூடி, Read More

Read More
LatestNews

அனைத்து வணிக வளாகங்களையும் மீண்டும் திறக்க அரசாங்கம் திடீர் அனுமதி!!

சுகாதார பரிந்துரைகளின்படி நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. சுகாதார சேவைகள் இயக்குநரால் நேற்று வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களில் அனைத்து வணிக வளாகங்களையும் மூடுமாறு கூறியுள்ளார். எனினும் இன்று குறித்த சுகாதார வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டு வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய திருத்தத்திற்கு அமைய அனைத்து வணிக வளாகங்களும் திறக்கலாம். ஒரே நேரத்தில் 25 சதவீத வாடிக்கையாளர்களுக்கே இடமளிக்க முடியும் என்றும் கூறுகிறது. கொரோனா பரவலில் இருந்து பாதுகாக்க Read More

Read More
LatestNews

மாகாண எல்லையை கடக்க அனுமதி யாருக்கெல்லாம்??

மாகாண எல்லையை கடக்கக்கூடியவர்கள் தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, சுகாதார சேவை, பொலிஸார், முப்படையினர், அரச ஊழியர்களின் உத்தியோகப்பூர்வ பயணங்கள், அத்தியாவசிய பொருள் விநியோகம், மிக நெருக்கமான உறவினர்களின் மரண வீடு (ஆவணம் அவசியம்), துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வோர் (ஆவணம் அவசியம்) ஆகியோருக்கே மாகாண எல்லையை கடக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNews

யாழ் அரசாங்க அதிபர் முக்கிய அறிவித்தல் – அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று தீவிரமடைந்த நிலை காணப்படுகின்ற அதே வேளை இறப்புகளும் அதிகரித்து செல்கின்ற போக்கு காணப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் அறிவித்திருக்கிற புதிய சுகாதார விதிமுறைகளை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் சுகாதாரத் திணைக்களம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து செயற்படுத்தப்படுகின்றன. Read More

Read More
LatestNews

குழந்தை பிறந்து 6 நாட்களின் பின் கொரோனாவால் உயிரிழந்த பெண்!!

கம்பஹா மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்த 33 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மகப்பேறுக்காக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் குழந்தை பிரசவித்து 6 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். இதில் தெல்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார். மேலும், பிறந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More
LatestNews

தீவிர நிலையை அடைந்தது மேல் மாகாணம்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

மேல் மாகாணத்தில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சுமார் 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு ஒட்சிசனின் உதவி தேவைப்படுகின்றது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லால் பனாபிடிய தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இதேவேளை, கொழும்பில் அடையாளம் காணப்படும் நோயாளர்களில் 90 Read More

Read More